Tuesday, September 02, 2014 Posted by Dr.Subashini    வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. மலேசியாவில் 1920லிருந்து 1940வரை ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை தோட்டங்களை உருவாக்கவும் தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து தமிழ்Read More →

  மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்   வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.   இப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்ய மிக உறுதுனையாக இருந்த திருமதி.பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு,  திரு.ஆரூரன் ஆகியோருக்கு இவ்வேளையில் என் நன்றி.   விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.com/2013/12/blog-post.html யூடியூபில்Read More →

பெரியாண்டவர்: எங்கள் குல தெய்வம், சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணூர்பட்டி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் பெரியாண்டவர் தான். ஊரின் எல்லையில் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது .   செல்லும் வழி :   நாமக்கல் அல்லது சேலத்தில் இருந்து புதுசத்திரம் சென்று விட்டு அங்கிருந்து டாக்சி கிடைக்கும் அல்லது கொஞ்சம் பொறுமையாய் இருந்தால் அரசு பஸ்Read More →

 முனைவர் காளைராசன்     முன்பு ஒரு முறை மின்தமிழிலில் திருமதி.சுபாஷினி டெர்மல் அவர்கள் ஐயனார் கோயில்கள் பற்றியும் கிராமதேவதைகள் மற்றும் தெய்வங்கள் பற்றியும் எழுதுமாறு கேட்டிருந்தார்.  நானும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஐயனார்கோயில்கள் பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தேன்.  மேலும் கொல்லங்குடி வெட்டுடையார்காளி பற்றி எழுதுவதாகவும் கூறியிருந்தேன்.       கடந்த நந்தன வருடம் ஐப்பசி 12ஆம் நாள் (28 அக்டோபர் 2012) ஞாயிற்றுக் கிழமையன்று சிவகங்கையில் நடைபெற்றRead More →

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் கட்டுரையும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி   நான் இந்த வருடம் (ஜனவரி 2012ல்) தமிழகம் சென்றிருந்த போது ஈரோட்டில் சில நாட்கள் இருந்ததைத் பற்றி வேறு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். ஈரோட்டில் எனது திட்டப்படி ஒரு சில இடங்களைச் சென்று பார்த்து வர வேண்டும் என்ற ஒரு பட்டியல் இருந்தது. ஈரோட்டில் இருந்த சமயம் திரு.திவாகருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஈரோட்டில் இருந்தால் நிச்சம் திருச்செங்கோடுRead More →

படங்கள், ஒலிப்பதிவு, விழியம் தயாரிப்பு: முனைவர்.க.சுபாஷிணி விழியம் பதிவு: ப்ரகாஷ் சுகுமாரன்   கூத்தனார் அப்பன் திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மோட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் கூத்தனார் அப்பன் சிலை உள்ளது.   கூத்தனார் அப்பன் சிலை கோயில் இல்லாது ஒரு சிலை மட்டும் மிக வித்தியாசமான வடிவத்தில் வட்டமான ஒரு மேல் பகுதிRead More →

கீதா சாம்பசிவம்    இவள் அன்னையின் அம்சமே ஆவாள்.     திருக்கைலையில் அன்னையும், ஈசனும் ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும் ஓர் வேளையில் அன்னைக்கு ஒரு சந்தேகம்.  ”சுவாமி, சூரிய சந்திரர்கள் உங்கள் கண்கள் என்கின்றனரே, அது உண்மையா”,  என வினவினாள் அன்னை.  அனைத்தும் அறிந்தவளுக்கு அனைவரையும் தன் சக்தியால் பரிமளிக்கச் செய்பவளுக்குத் தெரியாத ஒன்றா? புரியாத ஒன்றா?  இல்லை; இதன் மூலம் அன்னை ஏதோ மனதில் திருவிளையாடல் செய்ய எண்ணிRead More →

கீதா சாம்பசிவம்   பாவாடை ராயனைப் பற்றி மாரியம்மன் தாலாட்டில் நாலைந்து இடங்களில் வருகின்றது.   "பாவாடைராயனைத் தான் பத்தினியே தானழையும்"   என இரு இடங்களிலும், பாவாடைராயனும் தான் பக்கத்திலே கொலுவிருந்தார்  என்றொரு இடத்திலும் பாவாடை ராயனும் பல தேவரும் வாழி என்றொரு இடத்திலும் வருகிறது. இந்தப் பாவாடை ராயன் யாருனு புரியாமல் யோசனையிலே இருந்தேன்.  அப்புறமாத் தான் காவல் தெய்வமாய் இருக்குமோ என ஒரு சந்தேகம்.  காவல் தெய்வங்கள்Read More →

  கீதா சாம்பசிவம்   மஹாமாறன் என்னும் அசுரன் தான் பெற்ற தவங்களால் உலகத்து மக்களை எல்லாம் பல வகையிலும் துன்புறுத்தி வந்தான்.  பல்வேறு விதமான நோய்களையும் உண்டாக்கினான்.  அதில் ஒன்றே வைசூரி என்னும் அம்மை நோய்.  இந்த நோய் வந்தவர்களை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை.  உடல் முழுதும் கொப்புளங்கள் உண்டாகிக் கண்பார்வையும் மறைக்கப் பட்டுத் துடிதுடித்த மக்களைக் காக்கவேண்டி அம்பிகை தன்னிலிருந்து உருவாக்கியவளே மஹாமாரி ஆவாள்.  இந்தRead More →